பாரதிராஜா மீண்டும் மீண்டு வருவார்: நம்பிக்கை தெரிவித்த கவிஞர் வைரமுத்து

பாரதிராஜா மீண்டும் மீண்டு வருவார்: நம்பிக்கை தெரிவித்த கவிஞர் வைரமுத்து

இயக்குநர் பாரதிராஜா நல்ல நிலையில் உள்ளார். அவர் மீண்டும் மீண்டு வருவார் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

தமிழ் திரைப்பட உலகின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவிற்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென பாரதிராஜா, மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, மருத்துவமனைக்கு இன்று நேரில் வந்து பாரதிராஜாவை பார்த்தார். இதன் பின்பு கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "இயக்குநர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நாளும் நாளும் தேறி வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் நல்லமுறையில் சிகிச்சையை வழங்கி வருகின்றனர். அச்சப்படுவதற்கு ஆதாரம் இல்லை. வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

நெஞ்சில் கொஞ்சம் சளி இருக்கிறது. அது விரைவில் சரி செய்யப்படும் என்று மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. நுரையீரலில் சற்றே நீர் சேந்திருக்கிறது. அதுவும் சரி செய்யப்படும் என்று உறுதி தரப்பட்டிருக்கிறது. அதனால் நன்றாக பேசுகிறார், அடையாளம் கண்டுகொள்கிறார், நல்ல நிலையில் இருக்கிறார். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். பாரதிராஜா மீண்டும் மீண்டு வருவார் கலை உலகை ஆண்டு வருவார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in