உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: விரைவில் வீடு திரும்புகிறார் பாரதிராஜா!

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: விரைவில் வீடு திரும்புகிறார் பாரதிராஜா!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திருப்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையின் பிரபலமான இயக்குநராகவும், தற்போது நடிகராகவும் வலம் வருபவர் பாரதிராஜா. இவர் கடந்த 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாகச் சென்னை, தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி 26-ம் தேதி நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொதுப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தான் நலம் பெற்று வருவதாகவும், விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் என்றும் பாரதிராஜா தெரிவித்திருந்தார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in