இயக்குநர் பாரதிராஜா.
இயக்குநர் பாரதிராஜா.தேனி பின்னணியில் உருவாகும் 'தாய்மெய்': இயக்குநராக மீண்டும் களத்தில் பாரதிராஜா

தேனி பின்னணியில் உருவாகும் 'தாய்மெய்': இயக்குநராக மீண்டும் களத்தில் பாரதிராஜா

தேனி மாவட்ட பின்னணியில் உருவாகும் 'தாய்மெய்' படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக பாரதிராஜா களமிறங்குகிறார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. மண் மணம் மாறாத கதைக்களங்கள் மூலம் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தனது படங்களின் மூலம் பல நடிகைகளை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தற்போது நடிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு வரவேற்பைப் பெற்றது. தற்போது நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், நிர்மல்குமார் இயக்கும் ‘நா நா’ உட்பட பல படங்களில் பாரதிராஜா நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவர் மீண்டும் படம் இயக்க உள்ளார். அவர் கடைசியாக ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இதன் பின் அவர் நடிப்பில் பிஸியானார். இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி பாரதிராஜா நடிக்க உள்ளார்.

தேனி மாவட்ட பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘தாய்மெய்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in