திடீரென வந்து ஒரு காட்சியை இயக்கிய பாரதிராஜா: படக்குழு உற்சாகம்

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா திடீரென வந்து ஒரு காட்சியை இயக்கிய பாரதிராஜா: படக்குழு உற்சாகம்

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் 'வடக்கன்' திரைப்படத்தை எடுத்து வருகிறது. இந்தத் திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இன்று சென்ற பாரதிராஜா ஒரு காட்சியை இயக்கினார். இதனால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் பாரதிராஜா.
படப்பிடிப்பு தளத்தில் பாரதிராஜா.திடீரென வந்து ஒரு காட்சியை இயக்கிய பாரதிராஜா: படக்குழு உற்சாகம்

பரத், கோபிகா நடித்த 'எம்டன் மகன்', விஷ்ணு விஷால் நடித்த 'வெண்ணிலா கபடி குழு', கார்த்தி நடித்த 'நான் மகான் அல்ல', விஷால் நடித்த 'பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், 'அழகர்சாமியின் குதிரை' திரைப்படத்தின் கதாசிரியருமான பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தின் சூட்டிங் இன்று நடந்து கொண்டிருக்கும்போது தான் பாரதிராஜா படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துள்ளார்.

இதுகுறித்து நெகிழ்ச்சியாக தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தயாரிப்பாளரும், பிரபல பதிப்பக உரிமையாளருமான வேடியப்பன், “இயக்குநர் இமயம் பாரதிராஜா, 'வடக்கன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, இயக்குநர் பாஸ்கர் சக்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் என்னையும் ஆசிர்வதித்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்புத் தளத்திற்கு திரும்பியதால் மிகுந்த உற்சாகமாக இருந்தார். ஒரு காட்சியை இயக்கினார். வயதை, உடல் நிலையை மறந்து எங்களோடு நீண்டநேரம் பேசிச்சிரித்து மகிழ்ந்தார். ஒன்றாக  உடனமர்ந்து உணவருந்தினார். தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதிய பிதாமகரின் வருகை வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக மனதில் பதிவாகிவிட்டது ”என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in