`என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க’: பாரதிராஜா

`என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க’: பாரதிராஜா

``என்னை இமயம் அப்படி இப்படி என்று சொன்னாலும் ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன்'' என்று இயக்குநர் பாரதிராஜா சொன்னார்.

ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இதில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் நடித்திருக்கிறார்கள்.

ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார்.

இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

கம்பெனி பாடல் வெளியீட்டு விழாவில்...
கம்பெனி பாடல் வெளியீட்டு விழாவில்...

விழாவில், இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ``தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருப்பதாகச் சொன்னார். அப்படி வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன்தான் பாரதிராஜா. சினிமா யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள லவ் பண்ணும்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் மகன் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். நான் எந்த பின்புலம் இல்லாமல் வந்தேன். இங்கே பேசிய இசையமைப்பாளர் தன்னடக்கத்தோடு பேசினார். அதுதான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும். பெரிய இடத்துக்கு போன பிறகும் இப்படியே இருக்க வேண்டும். பலர் பாராட்டுவார்கள். ஆனால், அதை தலையில் தூக்கி வைத்துக்கொள்ளக் கூடாது, கக்கத்தில் வைக்க வேண்டும். நான் அப்படி தான் செய்வேன். என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க, அது அவங்களுக்கு தான், அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன்’ என்றார்.

Related Stories

No stories found.