பரத்தின் `லவ்’: வாணி போஜன் வெளியிட்ட தகவல்

பரத்தின் `லவ்’: வாணி போஜன் வெளியிட்ட தகவல்
Silverscreen Inc.

நடிகர் பரத்தின் ’லவ்’ படம் பற்றி நடிகை வாணி போஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தை ஆர்பி பாலா இயக்குகிறார். இந்தப் படத்தில் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். மற்றும் விவேக் பிரசன்னா, பிக் பாஸ் டேனி உட்பட பலர் நடிக்கின்றனர். ரான்னி ரபேல் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்தப் படம் பற்றிய அப்டேட்டை நடிகை வாணி போஜன், தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். படக்குழுவுடன் கேக் வெட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். படத்தை ஆர்பி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in