கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சின்னத்திரை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி சின்னத்திரை தொடர் நடிகர் தீபேஷ் பான் (deepesh bhan). பிரபல ’பாபிஜி கர் பர் ஹெய்ன்’ தொலைக்காட்சி தொடரில் மால்கான் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். இது ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்ற கேரக்டர். பல்வேறு தொடர்களில் நடித்துள்ள இவர், மும்பையில் வசித்து வந்தார்.
தாஹிசர் என்ற பகுதியில் நடிகர் தீபேஷ் பான் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரத்திலேயே அவர் மரணமடைந்தார். அவர் கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு, ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
அவரது மறைவை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.