2022-ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இவைதான்!

’புக் மை ஷோ’ பட்டியல்
2022-ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இவைதான்!

2022-ம் ஆண்டின் மக்கள் விருப்பத்துக்குரிய மகத்தான திரைப்படங்களை ’புக் மை ஷோ’ பட்டியலிட்டுள்ளது. கோலிவுட் தயாரிப்புகளான ’விக்ரம், பொன்னியின் செல்வன் -1’ உள்ளிட்ட படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கரோனா பொது முடக்கத்தால் மக்களின் பொழுதுபோக்குக்கான புகலிடங்களும் முடங்கிப்போயின. கரோனா கட்டுப்பாடுகள் விலகியதும், மக்கள் பேராவலுடன் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். இந்த சினிமா ரசிகர்களுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவில் முன்னணியில் இருக்கிறது ’புக் மை ஷோ’ நிறுவனம்.

புக் மை ஷோ வாயிலாக முன்பதிவு செய்ய குவிந்த மக்கள் விருப்பங்களின் அடிப்படையில், 2022-ம் ஆண்டின் வெற்றிகரமான திரைப்படங்களை இந்த நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அந்த வகையில், ஆண்டின் வெற்றி திரைப்படமாக ’கேஜிஎஃப்-2’ முதலிடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் 5 இடங்களில் ’ஆர்ஆர்ஆர், காந்தாரா, தி காஷ்மீர் ஃபைல்ஸ், பொன்னியின் செல்வன்-1’ ஆகியவை வருகின்றன.

இதே டாப் 10 பட்டியலின் இதர இடங்களை ’பிரம்மாஸ்திரா-1, விக்ரம், பூல் புலையா-2(இந்தி), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்(ஆங்கிலம்), த்ரிஷ்யம்-2(இந்தி)’ ஆகியவை அடுத்தடுத்து பிடித்திருக்கின்றன.

இதே போல, மிக வேகமாக முன்பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் ’கேஜிஎஃப்-2, ஆர்ஆர்ஆர், பீஸ்ட், பொன்னியின் செல்வன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்’ ஆகிய திரைப்படங்கள் இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளன.

தனக்கான எதிர்பார்ப்புகளை உடைத்தவையாக ’காந்தாரா, தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா -2, சீதா ராமம், 777 சார்லி’ ஆகிய திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in