ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகைக்கான விருது பெற்றார் காயத்ரி

மாமனிதன் திரைப்படத்தில் நடித்ததற்காக விருது
காயத்ரி
காயத்ரி

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது பெற்றார் நடிகை காயத்ரி.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ‘ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இந்த திரைவிழாவில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, சாய் பல்லவி நடித்த ‘கார்கி’, ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘விசித்திரன்’, விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘முகிழ்’ உள்ளிட்டவை அடங்கும்.

ஜன.10-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் நேற்றைய நிகழ்வுகளின் அங்கமாக, வாழ்நாள் சாதனையாளர் விருதினை நடிகை அபர்னாசென் பெற்றார். இதர விருதுகளின் வரிசையில் சிறந்த நடிகைக்கான விருது காயத்ரிக்கு வழங்கப்பட்டது. மாமனிதன் என்ற தமிழ் படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருதினை காயத்ரிக்கு, அபர்னாசென் வழங்கினார்.

மாமனிதன் திரைப்படத்தில், விஜய் சேதுபதியுடன் காயத்ரி
மாமனிதன் திரைப்படத்தில், விஜய் சேதுபதியுடன் காயத்ரி

சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்திருந்தனர். 2 குழந்தைகளின் தாயாக வித்தியாசமான தோற்றத்தில், இயல்பாக தோன்றியிருந்தார் காயத்ரி. அவரது முகத்துக்கே உரிய மென்சோகம் மாமனிதன் கதைக்கு உதவியது. வணிக சமரசங்களுக்கு அப்பாற்பட்டு சீனு ராமசாமி மாமனிதன் திரைப்படத்தை செதுக்கியிருந்தார்.

மாமனிதன் படத்தில் நடித்தமைக்காக ஜெய்ப்பூர் சர்வதேச திரை விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற காய்த்ரிக்கு, இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in