நடிகர் சூர்யா பட்டு வேட்டி, சட்டையில் வந்து தேசிய விருதை வாங்கினார்!

நடிகர் சூர்யா பட்டு வேட்டி, சட்டையில் வந்து தேசிய விருதை வாங்கினார்!

சூரரைப்போற்று படத்தில் நடித்த சூர்யாவுக்கு இன்று தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற வந்த நடிகர் சூர்யா பட்டு வேட்டி, சட்டையுடன் வந்து அசத்தினார்.

2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் அதிகப்பட்சமாக சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பிரிவில் சூரரைப்போற்று திரைக்கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேசிய விருதுக்கு தேர்வானது.

இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சூர்யா, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. நடிகர் சூர்யா பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது மனைவி ஜோதிகாவுக்கும் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in