பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி

மாதபி முகர்ஜி
மாதபி முகர்ஜி

பிரபல வங்காள நடிகையும் சத்யஜித் ரே படங்களில் நடித்தவருமான மாதபி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்க மொழி சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுபவர், மாதபி முகர்ஜி (80). மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித் ரே-யின் மகாநகர், சாருலதா, காபுருஷ், மிருணாள் சென்னின் பைஷே ஷரபோன், கல்கத்தா 71, ரித்வித் கட்காவின் மெகே தாகா தாரா, கமோல் கந்தார் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ’திப்ரதிரிர் கப்யா’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

மாதபி முகர்ஜி
மாதபி முகர்ஜி

வங்காள நடிகர், நிர்மல் குமாரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும், மாதபி முகர்ஜிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடும்பத்தினர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் விரைவில் குணமடைய, ரசிகர்களும் திரையுலகினரும் பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in