’ரிலேஷன்ஷிப்புக்குள் நுழையறதுக்கு முன்னாடி இது ரொம்ப முக்கியம்...’ நடிகை சமந்தா ரசிகர்களுக்கு அட்வைஸ்!

நடிகை சமந்தா...
நடிகை சமந்தா...

'இரண்டாவது ரிலேஷன்ஷிப்பிற்குள் நுழையும் முன் இதை கவனத்தில் கொள்ளுங்கள்’ என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பாசிட்டிவான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இப்போது ரிலேஷன்ஷிப் சம்பந்தமாக தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா...
நடிகை சமந்தா...

அவர் பகிர்ந்திருப்பதாவது, ‘நீங்கள் இரண்டாவது ரிலேஷன்ஷிப்பிற்குள் நுழையும் முன்போ அல்லது முதல் ரிலேஷன்ஷிப்பிற்குள் போகும் போதோ முதலில் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உடல்நலம், மனநலன், உடற்பயிற்சி, உணர்வுப்பூர்வமாக நல்ல உணவு, உறக்கம் என இவை அனைத்திற்கும் முன்னுரிமை கொடுங்கள்.

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு...
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு...

அதன் பிறகு நம்பிக்கையோடும், பலத்தோடும், மரியாதையோடும், அன்போடும் ரிலேஷன்ஷிப்பிற்குள் நுழையுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

நடிகர் நாக சைதன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா அடுத்து காதல், திருமணம் என வாழ்க்கையை அவர் விருப்பப்படி வாழ வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in