`அரபிக்குத்து' பாடலோடு நிறுத்தப்பட்டது `பீஸ்ட்' படம்: காரணம் இவர்கள்தான்?

`அரபிக்குத்து' பாடலோடு நிறுத்தப்பட்டது `பீஸ்ட்' படம்: காரணம் இவர்கள்தான்?
பீஸ்ட்- விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். நாகர்கோவிலில் ரசிகர்களின் அதீத கொண்டாட்டத்தால் காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழலுக்குள் விஜய் ரசிகர்கள் தள்ளிவிட்டனர்.

கிழிக்கப்பட்ட திரை
கிழிக்கப்பட்ட திரை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பயோனியர் வசந்தம் பேலஸில் விஜய் நடித்த `பீஸ்ட்' திரைப்படம் திரையிடப்பட்டது. விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் திரையரங்கமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் `பீஸ்ட்' திரைப்படம் திரையிடப்பட்டது. திரையில் அரபிக்குத்து பாடல் வந்தபோது உற்சாக மிகுதியில் திரைக்கு பக்கத்தில் நின்று ரசிகர்கள் ஆடத் தொடங்கினர். உற்சாக மிகுதியில் திரையில் தங்கள் ஆஸ்தான நடிகரை தொட்டும், வணங்கியும் மகிழ்ந்தவாறு ஆட்டம் போட்டனர். இதில் ரசிகர்கள் தங்களுக்குள் முந்தியடித்துக்கொண்டு ஆடியதில் திரை கிழிந்தது. இதனால் முதல் காட்சியிலேயே அரபிக்குத்து பாடலோடு படம் நிறுத்தப்பட்டது. அதிகளவு கட்டணம் செலுத்தி, ரசிகர் மன்ற டிக்கெட் வாங்கிய ரசிகர்களும் தங்களது அதீத கொண்டாட்டத்தால் படம் பார்க்க முடியவில்லையே என வேதனையுடன் புலம்பிச் சென்றனர். திரை சரிசெய்யப்பட்ட பின்னரே அடுத்த காட்சி திரையிடப்படும் என திரையரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.