மே 13 முதல் ஓடிடி-யில் 'பீஸ்ட்'?

மே 13 முதல் ஓடிடி-யில் 'பீஸ்ட்'?

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், வரும் மே 13-ம் தேதி முதல் ஓடிடி தளத்திற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13-ம் தேதி வெளியான இந்தப்படம் கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலை வாரிக்குவித்தே வருகிறது. இத்திரைப்படம் இதுவரை 127 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருக்கும் நிலையில் மே 13-ம் தேதி முதல் பீஸ்ட் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

திரையரங்கில் படம் வெளியாகி ஒரு மாதங்களுக்குப் பின் ஓடிடி தளத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ‘பீஸ்ட்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் தளங்களில் மே 13-ல் வெளியாகிறதாம். ஆனால் திரையரங்குகளில் ‘பீஸ்ட்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இப்போது இது குறித்து அறிவிப்பு வெளியிடாமல் மவுனம் காத்திருக்கிறது. படத்தின் சேட்டிலைட் உரிமையும் சன் டிவி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.