`நடிகை ஓவியாவை பற்றி பேசுவது எனது விருப்பம்'- கே.ராஜன் புகாருக்கு பயில்வான் ரங்கநாதன் பதில்

`நடிகை ஓவியாவை பற்றி பேசுவது எனது விருப்பம்'- கே.ராஜன் புகாருக்கு பயில்வான் ரங்கநாதன் பதில்

தன் மீது பொய் புகார் அளித்த சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடிகர் பயில்வான் ரங்கநாதன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர், நடிகைகள் குறித்து பொய்யான தகவல்களை பேசி பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென தயாரிப்பாளர் கே.ராஜன் நேற்று முன்தினம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இன்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் தயாரிப்பாளர் கே.ராஜன் தன்னை பற்றி பொய்யான தகவல்களை தெரிவித்து வருவதுடன் தன் மீது பொய் புகார் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பயில்வான் ரங்க நாதன், தயாரிப்பாளர் கே.ராஜன் எந்தப் படத்தையும் தயாரிக்காத ஒரு காலி பெருங்காய டப்பா. அவர் தன்னைப்பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நடிகர், நடிகைகளிடம் பிளாக்மெயில் செய்து பணம் வாங்கியதாக கே.ராஜன் நிரூபித்துவிட்டால் இந்த தொழிலை விட்டுச் செல்கிறேன். அப்படி இல்லையென்றால் அவர் நிர்வாணமாக செல்ல தயாரா?. யூடியூப்பில் தான் கூறும் கருத்துக்கள் காவல்துறையினருக்கு அதிகம் பிடிக்கும். அதை பல காவலர்களே தன்னிடம் கூறினர். தன்னை தாக்க வந்தால் அரிவாளால் வீசுவேன். தான் தூத்துக்குடிகாரன். கோழை அல்ல.

சினிமாவில் ஒழுக்கமாக வாழ்பவர்களில் நானும் ஒருத்தன், யூடியூப் மூலம் பலரை சந்தோஷப்படுத்துவதால் மில்லியன் கணக்கானோர் தன்னை பின்பற்றுகிறார்கள். தயாரிப்பாளர் கே.ராஜன் யூடியூபில் பேசுவதை சில நூறு பேர்கள் மட்டுமே பார்ப்பதால், அந்தக் காழ்புணர்ச்சியில் தன்னைப் பற்றி அவதூறாக பேசுகிறார். நான் யூடியூபில் நடிகர், நடிகைகள் பற்றி பேசுவதில் உண்மை தன்மை இருப்பதால்தான் யூடியூப் வீடியோக்களில் தனக்கு ஆதரவாக கமெண்டுகள் வருவதால் தொடர்ந்து இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தனக்குச் சொந்தமாக யூடியூப் சேனல் இல்லை. நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும் அதை தவிர்க்கிறேன். தான் நடிகைகளைப் பற்றி பேசுவது குறித்து சம்பந்தப்பட்ட நடிகைகளே புகார் அளிக்கவில்லை. நடிகை ஓவியா தன்னை பற்றி கூறிய கருத்தை தான் நான் வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளேன். நடிகை ஓவியாவை பற்றி பேசுவது எனது விருப்பம். யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக 25% நடிகர், நடிகைகளின் அந்தரங்க விவகாரங்களை தலைப்பாக வைத்திருக்கிறார்கள். தன்மீது தெரிவிக்கப்பட்ட அவதூறு குறித்து நிரூபிக்க முடியுமா?.

வியாபார நோக்கிற்காகவே, நடிகர், நடிகைகளை பற்றி பேசுகிறேன். நடிகைகளே தங்களைப் பற்றிய கிசுகிசுக்களை விளம்பரத்திற்காக பேச சொல்கின்றனர். காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் இரண்டு நடிகைகள் இரட்டை அர்த்தத்தில் பேசும்போது, நடிகர், நடிகைகள் பற்றி நான் பேசுவதில் என்ன தவறு" என கேள்வி எழுப்பினார்.

மற்றவர்களைப் பற்றி அவதூறாக பேசுவது சரியா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் அருவருக்கத்தக்க வார்த்தைகளை வீடியோவில் பேசியதே இல்லை என்றார்.

பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் இருப்பது தொடர்பாக பெண்களைப் பற்றி அவதூறாக பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, பெயர் தெரியாத அறிஞர் ஒருவர் கூறியதை தான் நான் கூறினேன் என மழுப்புதலாக பதில் அளித்தார்.

Related Stories

No stories found.