பயில்வான் ரங்கநாதன் நிதானத்தில் இல்லை: ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி கொந்தளிக்க காரணம் இது தான்!

ரெய்ஹானா
ரெய்ஹானா

"பயில்வான் ரங்கநாதன் நிதானத்தில் இல்லை என நினைக்கின்றேன். அவர் பேசியதில் எந்த உண்மையும் இல்லை" என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெய்ஹானா கூறியுள்ளார்.

திரைப்பட நடிகரும், பிரபல யூடியூப்பருமான பயில்வான் ரங்கநாதன், திரைப்பிரபலங்கள் குறித்து வெளியிடும் கருத்துக்கள் அடிக்கடி சர்சையை ஏற்படுத்தி வருகின்றன. அவருக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலரின் அந்தரங்களைச் சொல்கிறேன் என்ற பெயரில் அவதூறு செய்து வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. சினிமா வட்டாரத்தில் அன்றாடம் இவர் பொருத்திப்போடும் கிசுகிசு வெடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பயில்வான் ரங்கநாதன்
பயில்வான் ரங்கநாதன்

தற்போது கவிஞர் வைரமுத்து மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியது சர்ச்சையை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் திரைக்கு வர உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்டபோது, "வைரமுத்துவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, வேறு இளம் கவிஞர்களுக்கு வாய்ப்பளிப்பதன் காரணமாகத்தான் வைரமுத்துவை 'பொன்னியின் செல்வன்' படத்தில் பாடல்கள் எழுத அழைக்கவில்லை" என்று பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெய்ஹானாவிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தால் அவருடன் பணியாற்றமாட்டேன் என்று ரஹ்மான் கூறியதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெய்ஹானா கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்ர. இதுகுறித்து அவர் கூறுகையில்," பயில்வான் ரங்கநாதன் நிதானத்தில் இல்லை என நினைக்கின்றேன். அவர் பேசியதில் எந்த உண்மையும் இல்லை. அவரால் தற்போது பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டிப்பாக அவர் மீது மானநஷ்ட வழக்கை தொடர்வேன். மேலும் வைரமுத்துவுடன் நான் பணியாற்றி இருக்கின்றேன். அவர் என்னிடம் பத்து அடி தள்ளி நின்று தான் பேசுவார். அப்படி இருக்கையில் பயில்வான் ரங்கநாதன் வாய் கூசாமல் இவ்வாறு பேசுவது மிகவும் தவறு" என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in