'தொடர்ந்து இயங்குவதுதான் சினிமாவின் விதி': இயக்குநர் வசந்தபாலன் பரபரப்பு பேச்சு

இயக்குநர் வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன்

தொடர்ந்து இயங்குவதுதான் சினிமாவின் விதி என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்தார்.

மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘பேட்டரி’. இதில் செங்குட்டுவன் நாயகனாகவும், அம்மு அபிராமி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தீபக் செட்டி, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அம்மு அபிராமி, செங்குட்டுவன்
அம்மு அபிராமி, செங்குட்டுவன்

இதில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ‘’டிரெய்லரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. நல்ல படத்தில் இருந்துதான், இதுபோன்ற டிரெய்லர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்’’ என்றார்.

இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது, ‘’தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதுதான் சினிமாவின் விதி. இயக்குநர் மணிபாரதி தொடர்ந்து இயங்கி வருகிறார். ஒரு படத்திற்கு திரைக்கதைத்தான் முக்கியம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அருமை, வேற லெவல் என்ற வார்த்தைகள் 2 கிட்ஸ்களின் தாரக மந்திரமாக உள்ளது. இந்தப்படமும் அப்படி சிறப்பான வெற்றி பெறும்’’ என்றார்.

இயக்குனர்கள் மோகன்ராஜா, சரண், பன்னீர்செல்வம், நடிகர்கள் சூரி, நாகேந்திர பிரசாத், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பேட்டரி டிரெய்லர் வெளியீட்டு விழா.
பேட்டரி டிரெய்லர் வெளியீட்டு விழா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in