பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த ‘பார்பி’ இயக்குநர்!

‘பார்பி’
‘பார்பி’
Updated on
1 min read

உலகளவில் வசூல் சாதனைப் படைத்து ‘பார்பி’ திரைப்படம் பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘பார்பி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்துடன் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓபன் ஹெய்மர்’ திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாகி 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ‘பார்பி’ திரைப்படம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

இயக்குநர் கிரேட்டா
இயக்குநர் கிரேட்டா

குறிப்பாக உலக சினிமா வரலாற்றில் பெண் இயக்குநர் இயக்கிய திரைப்படம் பில்லியன் டாலர்களை கடந்து வசூல் செய்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த 29 ஆவது இயக்குநராக கிரேட்டா ஆவார். 

‘பார்பி’ திரைப்படம் அமெரிக்காவில் 459 மில்லியன் டாலர்களையும் வெளிநாட்டு திரையரங்குகளில் 572 மில்லியன் டாலர்களையும் வசூலித்து மொத்தமாக ஆயிரம் பில்லியன் டாலர்களை கடந்து தவிர்க்க முடியாத வெற்றியை தக்க வைத்துள்ளது ‘பார்பி’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in