இன்று ரிலீஸ் கிடையாது... நடிகை ஆன்ட்ரியா நடித்த 'கா – தி ஃபாரஸ்ட்' படத்திற்கு நீதிமன்றம் தடை!

'கா – தி ஃபாரஸ்ட்'
'கா – தி ஃபாரஸ்ட்'

நடிகை ஆன்ட்ரியா நடித்துளள 'கா – தி ஃபாரஸ்ட்' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா – தி ஃபாரஸ்ட்
கா – தி ஃபாரஸ்ட்

ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகை ஆன்ட்ரியா நடிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கியுள்ள 'கா – தி ஃபாரஸ்ட்' படம் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என எய்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயகுமார் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ” 'கா – தி ஃபாரஸ்ட்' படத் தயாரிப்புக்காக, ஷாலோம் ஸ்டூடியோ உரிமையாளர் ஜான்மேக்ஸ் தன்னை அணுகி 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். இந்த கடனை இழப்பீட்டு தொகையுடன் சேர்த்து 90 நாட்களில் திருப்பித் தந்து விடுவதாக கூறினர். படத்தின் சாட்டிலைட் உரிமையை வழங்கவும் ஒப்புக் கொண்டனர். இதுசம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கடன் தொகையையும், இழப்பீட்டு தொகையையும் இதுவரை திருப்பித் தரவில்லை.

ஆனால், படத்தின் வெளியீடு குறித்து தகவல் தெரிவிக்காமல், இன்று படத்தை வெளியிட உள்ளனர். இதற்கு அனுமதித்தால் அது தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். படத்தின் மொத்த காப்புரிமையும் தனக்கு சொந்தமானது என அறிவிக்க வேண்டும்” என கோரிக்கையும் வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், படத்தை இன்று வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஏப்ரல் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in