அரங்கம் அதிரும் 175-வது நாள்: ஆந்திராவை ஆட்கொண்ட ‘அகண்டா’!

அரங்கம் அதிரும் 175-வது நாள்: ஆந்திராவை ஆட்கொண்ட ‘அகண்டா’!

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. முன்னணி ஹீரோக்களில் ஒருவரான இவர் நடித்த ’அகண்டா’ என்ற படம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி வெளியானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இந்தப் படத்தில், பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, பூர்ணா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலில் தொடர்ந்து வெற்றி நடைபோட்டது. சில தியேட்டர்களில் மார்ச் மாதம் இந்தப் படம் நூறு நாட்களைக் கடந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலக்கலூரிப் பேட்டையில் உள்ள ‘ராமகிருஷ்ணா’ திரையரங்கில் இந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனைப் படைத்துள்ளது. திரைப்படங்கள், 50 நாட்கள், 100 நாட்கள் ஓடிய காலங்கள் முடிந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், பாலகிருஷ்ணாவின் ’அகண்டா’ படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக ‘ராமகிருஷ்ணா’ திரையரங்க உரிமையாளர் விழா ஒன்றை நடத்த இருப்பதாகவும் அதில் பாலகிருஷ்ணா கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in