பலூன்களைக் கண்டு குழந்தையான கமல்ஹாசன்: வைரலாகும் பிறந்த நாள் புகைப்படங்கள்

பலூன்களைக் கண்டு குழந்தையான கமல்ஹாசன்: வைரலாகும் பிறந்த நாள் புகைப்படங்கள்

நடிகர் கமல்ஹாசன் தனது 68வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள், வீடியோவை அவரது காஸ்டியூர் டிசைனர் அமிர்தா ராம் பகிர்ந்துள்ளார். அதை கமல் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்த 'விக்ரம்' சூப்பர் ஹிட்டானதுடன் வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். நடிப்பு, பாட்டு,நடனம், கதை, திரைக்கதை, பாடலாசிரியர். இயக்கம் என பன்முகத்திறமை கொண்ட கமல்ஹாசனின் 68-வது பிறந்த நாள் விழா நவ.7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தனது காஸ்டியூம் டிசைனரான அமிர்தா ராமுடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். பலூன்களைக் கண்டதும் சிறு குழந்தையாய் மாறி கமல்ஹாசன் விளையாடும் வீடியோவும், புகைப்படங்களையும் அமிர்தா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இவற்றை கமல் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in