தீபாவளியில் பிறந்த பெண் குழந்தை: மீண்டும் தந்தையானார் நடிகர் யோகி பாபு!

தீபாவளியில் பிறந்த பெண் குழந்தை: மீண்டும் தந்தையானார் நடிகர் யோகி பாபு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக யோகி பாபு மீண்டும் தந்தையாகியுள்ளார். தீபாவளி அன்று அவரது மனைவிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கால்பதித்தவர் நடிகர் யோகிபாபு. இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விசாகன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி ஆன இன்று இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் யோகி பாபு. யோகி பாபு - மஞ்சு தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in