இன்ஸ்டாவில் பதிவை போட்டு ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்திய பாலிவுட் நடிகர்!

தந்தை இர்பான் கானுடன், பாபில் கான்
தந்தை இர்பான் கானுடன், பாபில் கான்

தந்தை நினைவு நாளை முன்னிட்டு வளர்ந்து வரும் பாலிவுட் இளம் நடிகரான பாபில் கான், இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான். பாலிவுட்டில் வளர்ந்து வரும் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். திறமையான நடிப்பின் மூலம் தனது அடையாளத்தை நிலை நாட்டியுள்ளார். காலா படத்தின் மூலம் அறிமுகமான பாபில் கான், சமீபத்தில், கே.கே.மேனன், ஆர்.மாதவன், திவ்யேந்து உள்ளிட்டோருடன் இணைந்து, 'தி ரயில்வே மென்' என்ற படத்தில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் பாபில்கான் வெளியிட்டு பின்னர் நீக்கிய பதிவு
இன்ஸ்டாகிராமில் பாபில்கான் வெளியிட்டு பின்னர் நீக்கிய பதிவு

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பாபில் கான் வெளியிட்ட ஒரு பதிவின் மூலம் தனது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளார். தனது தந்தை 4ம் ஆண்டு நினைவு நாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில் இன்று காலை பாபில் கான் வெளியிட்டு, பின்னர் நீக்கிய பதிவில், “சில சமயங்களில் பாபாவிடம் (தந்தை) செல்ல தோன்றுகிறது" என குறிப்பிட்டிருந்தார்.

பாபில் கான் இந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கினாலும், சிலர் அதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாபில்கானின் உணர்ச்சிப்பூர்வமான பதிவு அவரது ரசிகர்கள், பின் தொடர்பாளர்களையும் கவலையடையச் செய்துள்ளது.

இருப்பினும் பல ரசிகர்கள் அவரை மன ரீதியாக ஆற்றுப்படுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பாபிலுக்கு ஆதரவாக ரசிகர் ஒருவர் வெளியிட்ட ஒரு பதிவில், "அவருக்கு நல்ல அதிர்வுகளையும் நேர்மறையானவற்றையும் அனுப்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

தாய், தந்தையுடன் பாபில்கான் (இடது)
தாய், தந்தையுடன் பாபில்கான் (இடது)

மற்றொரு ரசிகர், "உங்களுக்கு அன்பை அனுப்புகிறேன். அவர் (பாபில் கான் தாந்தை) மேலே இருந்து உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

பாபில் கான் அடுத்து, ஷூஜித் சிர்காரின் 'தி உமேஷ் க்ரோனிகல்ஸ்' என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in