என்னை அழிக்க நினைக்கிறார்கள்... பரபரப்பை ஏற்படுத்திய 'பாக்கியலட்சுமி' கோபி!

’பாக்கியலட்சுமி’ சதீஷ்!
’பாக்கியலட்சுமி’ சதீஷ்!

என்னை சிலர் அழிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என 'பாக்கியலட்சுமி' நடிகர் சதீஷ் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் நடித்த மலையாள சீரியல் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர் பகிர்ந்திருப்பதாவது, 'நான் மிகவும் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடன் நடிக்க ஒத்து கொண்ட ரோல் இது. ஆனால் எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்பதை வாழ்க்கை எனக்கு மீண்டும் பாடம் கற்பித்தது. நாம் என்ன தான் சிறப்பாக செயல் செய்தாலும், அதை அழிப்பதற்கு சில பேர் காத்து கொண்டிருப்பார்கள். நண்பர்களே! இது தான் உண்மை. வாழ்க்கை தத்துவம்' என கூறி இருக்கிறார்.

இவர் மறைமுகமாக 'பாக்கியலட்சுமி' சீரியலைத்தான் குறிப்பிடுகிறார் எனவும் நெகட்டிவ் ரோல் என்றாலும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி கதாபாத்திரத்திற்குக் கிடைத்த அதிக நெகட்டிவ் கமெண்ட் காரணமாக அந்த சீரியலை விட்டு விலகுகிறேன் என அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in