தன்பாலின ஈர்ப்பாளர் கதை: 'ஆர்ஆர்ஆர்’ படம் குறித்து ரசூல் பூக்குட்டி ட்விட்டால் தயாரிப்பாளர் கொந்தளிப்பு

தன்பாலின ஈர்ப்பாளர் கதை: 'ஆர்ஆர்ஆர்’ படம் குறித்து 
ரசூல் பூக்குட்டி ட்விட்டால் தயாரிப்பாளர் கொந்தளிப்பு

ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, 'ஆர்ஆர்ஆர்' படத்தை தன்பாலின ஈர்ப்பாளர் கதை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கிய படம், ’ஆர்ஆர்ஆர்’. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் மார்ச் 24-ம் தேதி வெளியாகி வசூலில் சாதனைப் படைத்துள்ளது. இந்தப் படம் வெளியான நேரத்தில் சில பாலிவுட் பிரபலங்கள் படத்தை குப்பை என்று திட்டி இருந்தனர். இருந்தாலும் சூப்பர் ஹிட்டாக ஓடியது.

ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியான பிறகு எதிர்மறை விமர்சனங்களை இந்தப் படம் அதிகமாகப் பெற்று வருகிறது. ரசிகர் ஒருவர் ட்விட்டரில், ’ஆர்ஆர்ஆர்’ என்றழைக்கப்படும் குப்பைப் படத்தை 30 நிமிடங்கள் வரை பார்த்தேன் என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு, ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, ’தன்பாலின ஈர்ப்பாளர் கதை’ என்று பதிலளித்தார். அதோடு, படத்தில் ஆலியா பட் செட் பிராப்பர்டி போல பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசூலின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் ’பாகுபலி’ தயாரிப்பாளர் ஷோபு யர்லகடா, " ’ஆர்ஆர்ஆர்', தன்பாலின ஈர்ப்பாளர் பற்றிய படம் என நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது மோசமான விஷயமா? இதை எப்படி நீங்கள் நியாயப்படுத்த முடியும்?" என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருக்குப் பதில் அளித்துள்ள ரசூல் பூக்குட்டி, ’ஒப்புக்கொள்கிறேன். அப்படியே இருந்தாலும் அது தவறில்லைதான். நான் என் நண்பருக்கு பதிலளித்தேன். பொதுவெளியில் கிண்டலாகப் பேசுவதைதான் தெரிவித்தேன். இதை நீங்கள் இவ்வளவு கவலைக்குரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் யாரையும் புண்படுத்துவதற்காக இதைத் தெரிவிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in