‘அழகி’ 2-ம் பாகம்; நடிகை நந்திதா தாஸ் ஆசை

நடிகை நந்திதா தாஸ்
நடிகை நந்திதா தாஸ்

‘அழகி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை அடுத்து, நடிகை நந்திதா தாஸ் இயக்குநர் தங்கர்பச்சானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கூடவே அழகி குறித்த தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

‘அழகி’
‘அழகி’

தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘அழகி’. இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகளான நிலையில், இப்படத்தின் நினைவுகள் தனது மனதோடு இருப்பதாக இயக்குநர் தங்கர்பச்சான் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். படம் பற்றிய தங்கள் நினைவுகளையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை நந்திதா தாஸ், வீடியோ மூலம் தங்கர்பச்சானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், கூறியிருப்பதாவது:

‘அழகி’
‘அழகி’

“இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அழகி படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்து விட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு நரைத்த முடி, கண்ணாடியெல்லாம் வந்துவிட்டது. ஆனாலும் 20 வருடங்கள் கடந்ததை நம்ப முடியவில்லை. படத்தின் நினைவுகள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளன.

இப்படி ஓர் அற்புதமான படத்தில் என்னை நடிக்க வைத்ததற்காக, இயக்குநர் தங்கர்பச்சானுக்கு நன்றி. அதேபோல் உடன் நடித்த அற்புதமான நடிகர்கள் பார்த்திபன், தேவயானி, சாயாஜி ஷிண்டே மற்றும் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசைஞானி இளையராஜாவுக்கு. என்றென்றும் மனதில் நிற்கும் அற்புதமான பாடல்களையும் இசையையும் தந்ததற்காக நன்றி. ‘அழகி 2’ எடுக்கப்பட்டு, அதில் நாங்கள் அனைவரும் இணைந்து மீண்டும் அந்த மேஜிக்கை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in