கடனை திருப்பிக் கேட்ட இளைஞர்... வாளால் சரமாரியாக வெட்டிய பிரபல நடிகர்: அதிரடி காட்டியது போலீஸ்

கடனை திருப்பிக் கேட்ட இளைஞர்... வாளால் சரமாரியாக வெட்டிய பிரபல நடிகர்: அதிரடி காட்டியது போலீஸ்

கொடுத்த கடனை கேட்க வந்த இளைஞரை, வாளால் சரமாரியாக வெட்டிய நடிகர் கைது செய்யப்பட்டார்.

பிரபல மலையாள நடிகர் வினீத் தட்டில் டேவிட். இவர், சூப்பர் ஹிட்டான, அய்யப்பனும் கோஷியும், ஆடு 2, அங்கமாலி டைரிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். திருச்சூர் அருகில் உள்ள புத்தன்பீடிகா பகுதியில் வசித்து வரும் இவர், ஆலப்புழை, துராவூரைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் 6 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

இதில் 3 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். பாக்கி 3 லட்சத்தைக் கொடுப்பது தொடர்பாக அலெக்ஸுக்கும் வினீத் தட்டிலுக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் கொடுத்த கடனை கேட்க, நடிகர் வினீத் தட்டில் வீட்டுக்கு அலெக்ஸ் நேற்று சென்றார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வினீத், வீட்டில் இருந்த வாளால், அலெக்ஸை சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த அலெக்ஸை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள அந்திகாடு போலீஸார், நடிகர் வினீத் தட்டில் டேவிட்டை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in