
நடிகரும்,இயக்குநருமான செல்வராகவன் வெளியிட்டுள்ள ஒரு ட்விட் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான இயக்குநர் செல்வராகவன் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் 'காதல் கொண்டேன்' , '7ஜி ரெயின்போ காலனி' , 'புதுப்பேட்டை', நடிகர் கார்த்தி நடிப்பில் 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தனித்த அடையாளம் பெற்றவர் செல்வராகவன். 'சாணி காகிதம்' , 'பீஸ்ட்', 'பகாசூரன்' உள்ளிட்ட படங்கள் மூலம் நடிகராகவும் மாறியுள்ளார்.
இந்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில்,“எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் ”ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து”தான்” என்று பதிவிட்டுள்ளார்.