ஆல்யா போலவே நடனத்தில் அசத்தும் மகள் அய்லா: வைரலாகும் வீடியோ!

ஆல்யா போலவே நடனத்தில் அசத்தும் மகள் அய்லா: வைரலாகும் வீடியோ!

சீரியல் நடிகை ஆல்யாவின் மகள் அய்லா அவரைப் போலவே நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா. அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதல் திருமணம் செய்து கொண்டவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன. இரண்டாவது குழந்தை தற்போது பிறந்துள்ளதால் சீரியலில் இருந்து பிரேக் எடுத்துள்ளார் ஆல்யா. சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காகக் கடுமையான உடற்பயிற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

முன்பு மகன் பிறந்ததற்காக சீரியல், விளம்பரம் என எந்தப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருந்தவர் தற்போது விளம்பரங்கள், கடைத் திறப்பு என மீண்டும் பிஸியாக ஆரம்பித்து இருக்கிறார். சீக்கிரமே சீரியலுக்கும் வந்துவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது சின்னத்திரை வட்டாரம்.

ஆல்யாவைப் போலவே, அவரது மகள் அய்லாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவரது க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், குறும்புகள் என சமூகவலைதளங்களில் அய்லாவைப் பின்தொடர்பவர்களும் ஏராளம். இப்போது ஆல்யா தனது மகள் அய்லாவுடன் ‘வாத்தி கம்மிங்’ பாட்டுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது. சீரியல்களில் நடித்து வரும்போதே ஆல்யா நடனத்திற்கு நிறைய ரசிகர்கள் இருந்தர்கள். இப்போது ஆல்யா போலவே, அய்லாவும் நடனத்தில் அசத்துகிறார் என ரசிகர்கள் கமென்ட்டில் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in