ஆலியா - ரண்பீர் ஜோடிக்கு அட்வான்ஸ் திருமணப் பரிசு!

ஆலியா - ரண்பீர் ஜோடிக்கு அட்வான்ஸ் திருமணப் பரிசு!

பாலிவுட் காதல் ஜோடியான ஆலியா பட் - ரண்பீர் கபூர் திருமணம் நாளை மறுநாள் (ஏப்.15) நடக்கவிருக்கிறது. இந்நிலையில், திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் இன்று தொடங்குகின்றன. மெஹந்தி (மருதாணி) வைக்கும் சடங்கு முதலில் நடக்கிறது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் இந்தத் திருமணம், மும்பையில் ரண்பீர் கபூரின் வாஸ்து அபார்ட்மென்ட் குடியிருப்பில் நடைபெறுகிறது. இதையொட்டி அவரது குடியிருப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, இருவரும் இணைந்து நடிக்கும் ‘பிரம்மாஸ்திரா: பார்ட் 1’ படத்தில் இடம்பெறும் ‘கேஸரியா’ பாடலை வெளியிட்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி. திருமணப் பரிசாக இந்தப் பாடலை இருவருக்கும் சமர்ப்பித்திருக்கிறார் அயன் முகர்ஜி.

அமிதாப் பச்சன் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், மவுனி ராய், நாகார்ஜுனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ப்ரீத்தம் இசையமைக்கும் இப்படத்தை, கரன் ஜோஹர், அயன் முகர்ஜி உள்ளிட்டோருடன் இணைந்து தயாரிக்கிறார் ரண்பீர் கபூர்!

Related Stories

No stories found.