ரீ ரிலீஸ்: 3 நாட்களில் `அவதார்’ அள்ளிய கோடிகள் இவ்வளவா?

ரீ ரிலீஸ்: 3 நாட்களில் `அவதார்’ அள்ளிய கோடிகள் இவ்வளவா?

மறு வெளியீடு செய்யப்பட்ட ‘அவதார்’ படம் 3 நாட்களில் பெற்ற வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வரவேற்பைப் பெற்ற படம், ‘அவதார்’. சாம் வொர்த்திங்டன், ஜோ சல்தானா, ஸ்டீபன் லாங் உட்பட பலர் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனைப் படைத்தது.

இதன் அடுத்த பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் மேலும் பலர் நடித்துள்ள இந்தப் படம், டிசம்பர் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன்பே, நவீன தொழில்நுட்பத்தில் ‘அவதார்’ படம் கடந்த 23-ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் வெளியானது. இதற்காக சிறப்பு ட்ரெய்லரையும் வெளியிட்டிருந்தனர். ’அவதார் 2’-ம் பாகம் வரும் வரை, இந்தப் படத்தை 4கே தரத்தில் 3-டியில் கண்டுகளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்தப் படம், கடந்த 3 நாட்களில் மட்டும் அதாவது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 245 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் 5 கோடி வசூலித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in