இணையத்தில் லீக் ஆனது ‘அவதார் 2’ டிரெய்லர்!

இணையத்தில் லீக் ஆனது ‘அவதார் 2’ டிரெய்லர்!

’அவதார் 2’ படத்தில் டிரெய்லர் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம், ’அவதார்’. சாம் வொர்த்திங்டன், ஜோ சல்தானா, ஸ்டீபன் லாங், மிச்செல் ரொட்ரிகியூஜ் உட்பட பலர் நடித்த இந்தப் படம், உலகெங்கும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் மேலும் பலர் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 16-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water)’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் 160 மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் டீசர் காட்சிகள், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த ‘சினிமாகான் 2022’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சமீபத்தில் காண்பிக்கப்பட்டது. அப்போதுதான், படத்தின் பெயர் தெரியவந்தது.

இந்நிலையில் மே 6-ம் தேதி இந்த படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டீஸர், டிரெய்லர் இணையத்தில் திடீரென லீக் ஆகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in