160 மொழிகளில் வெளியாகிறது: `அவதார்’ அடுத்த பாகம் டைட்டில் இதுதான்!

160 மொழிகளில் வெளியாகிறது: `அவதார்’ அடுத்த பாகம் டைட்டில் இதுதான்!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள ’அவதார்’ பட இரண்டாம் பாகத்தின் டைட்டில் தெரியவந்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம், ’அவதார்’. சாம் வொர்த்திங்டன், ஜோ சல்தானா, ஸ்டீபன் லாங், மிச்செல் ரொட்ரிகியூஜ் உட்பட பலர் நடித்த இந்தப் படம், உலகெங்கும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் மேலும் பலர் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 16-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water)’ என்று தலைப்பு வைத்துள்ளனர். உலகம் முழுவதும் 160 மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் டீசர் காட்சிகள், சினிமாகான் 2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரத்யேகமாக சமீபத்தில் காண்பிக்கப்பட்டது. அப்போது, படத்தின் பெயர் தெரியவந்தது. இந்நிலையில் மே 6-ம் தேதி இந்த படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தை போல இந்தப் படத்துக்கும் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in