`சரியான நேரத்தில் கிடைக்கும்; அதுவரை பொறுமையாக இருங்கள்'- மறைமுகமாக பதிலளித்த விக்னேஷ்சிவன்!

`சரியான நேரத்தில் கிடைக்கும்; அதுவரை பொறுமையாக இருங்கள்'- மறைமுகமாக பதிலளித்த விக்னேஷ்சிவன்!

வாடகைத்தாய் மூலம் தங்கள் குழந்தையை வரவேற்ற விக்னேஷ்சிவன்- நயன்தாரா தம்பதி இந்த விவாதங்களுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் விக்னேஷ்சிவன்- நயன்தாரா தம்பதி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருக்கும் செய்தியை அறிவித்தனர். திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றது சரியா எனப் பல விவாதங்களை இந்தச் செய்தி முன்னெடுத்தது.

இதற்கெல்லாம் விக்னேஷ்சிவன் தரப்பு அதிகாரப்பூர்வமாக விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் இயக்குநர் விக்னேஷ்சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் இதற்கெல்லாம் மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

அதில் அவர், ‘நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் உங்கள் வீட்டிற்குச் சென்று குழந்தைகளை நேசியுங்கள்’ எனவும், ‘எல்லாமே உங்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருங்கள். இதுவரை கிடைத்தவற்றிற்கு நன்றி தெரிவியுங்கள்’ என்றும் ‘எப்போதும் உங்களுக்காக உங்கள் வளர்ச்சி மீது பரிவு கொண்டு, உண்மையான அக்கறை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் தான் உங்களுடைய உண்மையான மக்கள்’ என அந்தப் பதிவுகளின் வாயிலாக தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in