குட்டி ரசிகைக்கு ஆட்டோகிராஃப்; 'ஜெயிலர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் உற்சாக ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்

குட்டி ரசிகைக்கு  ஆட்டோகிராஃப்; 'ஜெயிலர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் உற்சாக ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்

'ஜெயிலர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டி ரசிகை ஒருவருடன் நடிகர் ரஜினிகாந்த் ஜாலியாக பேசிக்கொண்டிருந்ததுடன் அவருக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தை தயாரிக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு 'ஜெயிலர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் நடிகை தமன்னா, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் மற்றும் வஸந்த்ரவி, ஜெய் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஜெயிலராக ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்ட பட்க்குழு, பின்னர் சென்னையிலேயே பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு பிரம்மாண்ட ஜெயில் செட் போடப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரைக் காண ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். இதையறிந்த ரஜினி அவரை நேரில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசி ஜாலியாக விளையாடி உள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு ஒரு புத்தகத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய ஆட்டோகிராஃபை போட்டு பரிசாக கொடுத்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in