தஞ்சையில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா?

தஞ்சையில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா?

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அல்லது தஞ்சையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கல்கியின் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

நந்தினி கதாப்பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும், வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் கார்த்தியும், அருண்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் ஜெயம்ரவியும், குந்தவை கதாப்பாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின டீசர் கடந்த 8-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அல்லது தஞ்சையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவிற்காக அழைக்கப்பட இருக்கும் விஐபிக்கள் பட்டியல் ரெடியாகி வருகிறதாம். மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள விழாவில் படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in