என்னை அவதூறாக விமர்சிப்பதா? -நடிகர் லால் ஆவேசம்

நடிகர் லால்
நடிகர் லால்

நடிகை பலாத்கார வழக்கில், தனது பழைய ஆடியோவை வெளியிட்டு சிலர் ஆபாசமாக விமர்சித்து வருவதாக நடிகர் லால் கூறியுள்ளார்.

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் லால். படங்களில் நடித்தும் வருகிற இவர், தமிழில், சண்டக்கோழி, தீபாவளி, ராமேஸ்வரம், குட்டிப்புலி, சீமராஜா, சுல்தான், கர்ணன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்போது பொன்னியின் செல்வன் உட்பட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் லால்
நடிகர் லால்

கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கேரளாவில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் லால், அப்போது சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு நடிகர் திலீப் வருத்தமடைந்தார் என்றும் இதில் அவருக்குத் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்றும் அப்போது கூறியிருந்தார்.

நடிகர் லாலின் இந்த ஆடியோ, இப்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதில் சிலர் நடிகர் லாலை, ஆபாசமாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் லால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நடிகர் லால்
நடிகர் லால்

“நடிகை தாக்கப்பட்டபோது, நான் கூறிய கருத்துகளின் ஆடியோவை மட்டும் சிலர் வேண்டும் என்றே இப்போது பரப்பி வருகின்றனர். இந்த கருத்துகள், இப்போது நான் கூறியவை அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். சிலர் நாகரிகமாகவும் சிலர் அவதூறாகவும் ஆபாசமான வார்த்தைகளால் என்னை விமர்சிக்கின்றனர். யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதை வேறுபடுத்த காவல் துறை, சட்டம், நீதிமன்றம் இருக்கிறது. இந்த அறிக்கையை கண்டபின், ’அப்போது உண்மையை உணராத லால், இப்போது தன்னை மாற்றிக்கொண்டார்’ என்பது போன்ற தலைப்புகளில் யாரும் செய்தி வெளியிட வேண்டாம். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் என்றும் உண்மையான குற்றவாளி தண்டிக்கப்படுவார் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு நடிகர் லால் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in