'ஆடியன்ஸ் ரென்ஸ்பான்ஸ் செமையா இருக்கு':மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்'ஆடியன்ஸ் ரென்ஸ்பான்ஸ் செமையா இருக்கு':மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!

'மாவீரன்' படத்தில் எந்தெந்த இடங்களுக்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் அதிகமாக இருக்கும் என்று நினைத்தோமோ அங்கெல்லாம் ரெஸ்பான்ஸ் அதிகமாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

'மாவீரன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், ‘’ இந்த திரைப்படத்தை புதிய கதைக்களத்துடன் பண்ணியிருக்கோம். என்னதான் புதுக்கதை எனக் கூறினாலும் தியேட்டரில் மக்கள் என்ன ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். அதற்காகத்தான் மொத்த டீமும் ஆவலாக இருந்தோம்.

எந்தெந்த தருணங்கள் நன்றாக இருக்கும் என நாங்கள் நினைத்து எடுத்தோமோ, அதற்கெல்லாம் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் சூப்பராக இருந்தது. சண்டைக் காட்சிகளுக்கு மக்களிடம் செம ரெஸ்பான்ஸ் இருந்தது. 'மாமன்னன்', 'மாவீரன்' இடையே எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. தியேட்டர்கள் போதுமான அளவு உள்ளது. படம் நல்ல இருப்பதாக உதயநிதி பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. சமூக அக்கறையுடைய படமாக உள்ளது என அவர் கூறினார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in