சமந்தாவின் அர்ப்பணிப்பு: புகழும் `யசோதா’ தயாரிப்பாளர்!

சமந்தாவின் அர்ப்பணிப்பு: புகழும் `யசோதா’ தயாரிப்பாளர்!

``நடிகை சமந்தாவின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டியது'' என்று ’யசோதா’ படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.

சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம், ’யசோதா’. இதில், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். ஹரி - ஹரிஷ் இயக்கும் இந்தப் படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், யசோதாவான சமந்தா, கண் விழிக்கிறாள். இதுவரையிலான அவள் உலகம் இனி இல்லை. சூழல், உடை, காலம் மற்றும் பேரமைதி அனைத்தும் ஆச்சரியமாக, வித்தியாசமானதாக இருக்கிறது. ஜன்னல் கதவை திறக்கிறாள். ஒரு புறா நிற்கிறது. அதைப் பிடிக்க நினைக்கிறாள். பிறகு என்ன நடக்கிறது என்பது போல் அந்த கிளிம்ப்ஸ் இருக்கிறது.

தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறும்போது, "பேமிலி மேன் 2 வெப்சீரிஸ் மூலம் பான் இந்திய ரசிகர்களைக் கவர்ந்துள்ளார், சமந்தா. அவர் வளர்ச்சியை மனதில் வைத்து, இந்தப் படத்தை சமரசமின்றி உருவாக்கியுள்ளோம். சமந்தா தனது பாத்திரத்தை வெளிப்படுத்திய விதம், அவரது அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டப்படவேண்டியது. அவரது நடிப்பை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜூன் 1-வது வாரம் வரை படப்பிடிப்பு நடைபெறும். ஸ்பெஷல் எஃபெக்ட்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 12-ம் தேதி படம் வெளியாகிறது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in