நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்: மர்ம நபர்கள் இரவில் அட்டகாசம்

நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்: மர்ம நபர்கள் இரவில் அட்டகாசம்

சென்னை அண்ணாநகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் இரவில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிஹரன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "அண்ணாநகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 26/9/2022 அன்று இரவு சிவப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷாலின் வீட்டை தாக்கினர். அதற்கான ஆதாரமாய் எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும் கொடுத்துள்ளோம். எனவே இந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு எங்கள் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in