மர்மநபர்கள் திடீர் தாக்குதல்... அலறிய மேக்கப்மேனுக்கு நடந்த துயரம்: படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன?

மர்மநபர்கள் திடீர் தாக்குதல்... அலறிய மேக்கப்மேனுக்கு நடந்த துயரம்: படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன?

சினிமா படப்பிடிப்புத் தளத்தில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் மேக்கப்மேன் படுகாயமடைந்தார்.

பிரபல மலையாள இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். ஓம் சாந்தி ஓஷானா, ஒரு முத்தாசி கதா, சாராஸ் ஆகிய படங்களை இயக்கிய இவர் ’மின்னல் முரளி’ உட்பட சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் இப்போது ’2403 எஃப்டி (2403 ft)’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்
இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் அருகே உள்ள பஞ்சிபாலம் என்ற பகுதியில் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித், போன் பண்ணுவதற்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்து, அருகில் இருந்த சாலைக்கு வந்தார். அப்போது அங்கு திடீரென்று வந்த முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட மர்மநபர்கள், அவரை சரமாரியாகத் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த அவர் அந்த இடத்திலேயே கீழே விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த படப்பிடிப்பு குழுவினர் அவரை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in