`அந்த தருணத்தை காண ஆவலாய் காத்திருக்கிறோம்'- அப்பாவாகப் போகும் அட்லீ மகிழ்ச்சி

`அந்த தருணத்தை காண ஆவலாய் காத்திருக்கிறோம்'- அப்பாவாகப் போகும் அட்லீ மகிழ்ச்சி

பிரபல இயக்குநர் அட்லீ தான் அப்பாவாகப் போவதாக அறிவித்துள்ளார். இந்த சந்தோச செய்தியைப் பகிர்ந்த அட்லீக்கு திரையுலகப் பிரமுகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ.  அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லீ,  தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குநர் வரிசையில் இணைந்தார். இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் "ஜவான் " படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'ஏ பார் ஆப்பிள் புரொடெக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இயக்குநர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்க்கை, இவர்களை தாண்டி ரசிகர்களும் வியக்கும் வண்ணம் இருக்கிறது. இவர்களது காதல் வாழ்கையின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகும் போது, அதை பார்த்த ரசிகர்கள், அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்தன.

இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்க போகும் மகிழ்ச்சியில் இருவரும் திளைத்து இருக்கின்றனர். பலவித உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இந்த தருணத்தில்,  இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக அறிவித்துள்ளனர்.  எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசிர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

"சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு  இருக்கிறோம்” என்றும் தம்பதிகள் பகிர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in