அதர்வாவின் மிரட்டல் ‘ட்ரிக்கர்’: போஸ்டரை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்!

அதர்வாவின் மிரட்டல் ‘ட்ரிக்கர்’: போஸ்டரை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்!

அதர்வா நடித்துள்ள ‘ட்ரிக்கர்’ படத்தின் போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வெளியிட்டார்.

அதர்வா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே அதர்வாவின் ‘100’ படத்தை இயக்கியவர். இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ப்ரோமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்களுடன் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் துப்பாக்கியுடன் அதர்வா மிரட்டலாக காட்சியளிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in