சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ - வெளியானது அறிவிப்பு!

சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ - வெளியானது அறிவிப்பு!

சற்குணம் இயக்கத்தின் அதர்வா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏ.சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண் மற்றும் அதர்வா இணைந்து நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிவிப்பினை லைகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் இப்படத்தில் ஆசிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், ராஜா முகமது எடிட்டராக பணிபுரிகிறார்.

சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிபெற்றது. தனுஷ் நடிப்பில் ‘நையாண்டி’, விமல் நடிப்பில் ‘களவாணி 2’ ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். ஏற்கெனவே சற்குணம் - அதர்வா கூட்டணியில் ‘சண்டிவீரன்’ திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in