நடிகை ஷோபாவின் நினைவுதினம்... ஆண்டு தோறும் கல்லறைக்கு கடலைமிட்டாய் வைக்கும் உதவி இயக்குநர்!

ஷோபா
ஷோபா

நடிகை ஷோபாவின் நினைவு தினத்தன்று உதவி இயக்குநர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் அவரது கல்லறைக்குச் சென்று கடலை மிட்டாய் வைத்து வழிபடுகிறார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபா. ‘மூடுபனி’, ‘பசி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது துயரம். 18 வயதிலேயே அவருக்கு நேர்ந்த இந்த முடிவு தமிழ் சினிமா சந்தித்த சோகங்களில் ஒன்று.

நடிகை ஷோபா
நடிகை ஷோபா

இவரது நினைவுதினமான மே 1 அன்று வருடாவருடம் உதவி இயக்குநர் ஒருவர் அவரது கல்லறைக்குச் சென்று கடலை மிட்டாய் வைத்து வழிபடுகிறார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் கேட்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் ஹரிஹரன். 42 ஆண்டுகளாக தனது கனவோடு போராடியவருக்கு இப்போது வயது 63 ஆகிறது. தனது வாழ்க்கையை சினிமாவில் தொலைத்துவிட்டேன் என்று இவர் முன்பு கொடுத்திருந்த பேட்டிகள் இணையத்தில் வைரலானது நினைவிருக்கலாம். இவர்தான் ஒவ்வொரு வருடம் நடிகை ஷோபாவின் நினைவிடத்திற்கு சென்று கடலை மிட்டாய் வைத்து வழிபட்டு வருகிறார்.

ஹரிஹரன்
ஹரிஹரன்

இதுபற்றி பேட்டியளித்திருக்கும் அவர், “பத்மினி, சாவித்ரி போல நடிகை ஷோபாவும் பிறவி நடிகை. ஒரு தயாரிப்பாளர் ‘ஷோபாவை வைத்து படம் பண்ணலாமா?’ என்று கேட்டார். சரி என்று அவருக்காக ஒரு கதை தயார் செய்துகொண்டு அவரிடம் போனேன். ஒரு உதவி இயக்குநருக்கும் ஹீரோயினுக்கு இடையே இருக்கும் காதல்தான் கதை. அவன் இயக்குநராக வருவதற்கு அவள் உதவுகிறாள். அவள் உதவியால் பெரிய இயக்குநராகும் அவன் ஒருகட்டத்தில் அவளை கண்டுகொள்ளாமல் போகிறான். காதல் தோல்வியால் மனமுடைந்த அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

பாலுமகேந்திராவுடன் ஷோபா
பாலுமகேந்திராவுடன் ஷோபா

அந்த இயக்குநர் தன்னுடைய படவிழாவுக்குப் போகும்போது அவனுடைய காரும், அந்த ஹீரோயினுடைய இறுதி ஊர்வலமும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொள்வது போல கிளைமாக்ஸ். இதைக் கேட்டதும் ஷோபா அழுதுவிட்டார். ‘படத்தில் நடிக்கிறேன். சம்பளம் என்ன?’ என்று கேட்டார். ‘பட்ஜெட் படம் மேடம்! பார்த்து சொல்லுங்க’ என்றேன்.

உடனே, அவர் ‘எனக்கு இரண்டு கடலை மிட்டாய் வேண்டும்’ என்றார். கண்கலங்கி விட்டேன். இந்தக் கதை கிட்டத்தட்ட அவருடைய நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிப்பது போலதான் இருந்தது என்பதை அவர் தற்கொலை சமயத்தில் புரிந்து கொண்டேன். பாலுமகேந்திராவுடன் ஷோபா வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கு உடன்பாடில்லை.

ஷோபா
ஷோபா

இந்த விஷயம் என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்குப் பிடித்த நடிகைக்கே நான் சொன்ன கதை முடிவாய் அமைந்துவிட்டது என்பதால் வருடா வருடம் அவர் நினைவு தினத்தன்று அவரது கல்லறைக்குச் சென்று சுத்தம் செய்வேன். ஷோபா என்னிடம் சம்பளமாய் கேட்ட இரண்டு கடலை மிட்டாயை வைத்து வழிபட்டுவிட்டு வருவேன்” என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in