கரோனாவால் நடிகர் திடீர் மரணம்: சென்னையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஏற்பட்ட சோகம்

கரோனாவால் நடிகர் திடீர் மரணம்: சென்னையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஏற்பட்ட சோகம்

புற்றுநோய்க்கு சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த அசாம் நடிகர், கரோனாவுக்கு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அசாமைச் சேர்ந்த பிரபல நடிகர் கிஷோர் தாஸ். சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த இவர், பல இசை வீடியோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்காக கவுஹாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மார்ச் மாதம் சென்னை வந்தார். இங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கிஷோர் தாஸ் உயிரிழந்தார். அவருக்கு வயது 30. அவர் மறைவு, அசாம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநில ரசிகர்கள், நடிகர்கள், கிஷோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த கிஷோர் தாஸின் உடலை அசாமுக்கு அனுப்பும் ஏற்பாடுகளை செய்யுமாறு அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தமிழக அரசை கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கொண்டு வர முடியவில்லை என்றும் அம்மாநில எம்எல்ஏ ஹேமங்கா தாகுரியா தெரிவித்துள்ளார். கிஷோர் தாஸின் இறுதிச் சடங்கு சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in