அசோக் செல்வனின் `ஹாஸ்டல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அசோக் செல்வனின் `ஹாஸ்டல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அசோக் செல்வன் நடித்துள்ள `ஹாஸ்டல்’ பட ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த படம், மன்மதலீலை. இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. இதை அடுத்து அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம், `ஹாஸ்டல்’. இதில் அவர் ஜோடியாக, பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இதை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். போபோ சஷி இசையமைக்கிறார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். நாசர், சதிஷ், முனிஸ்காந்த், ரவிமரியா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டலில் நடக்கும் சம்பவங்களை காமெடியாக சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் இருந்து வெளியான ஹாஸ்டல் கானா பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அசோக் செல்வன் இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்து வருகிறார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in