#ValentinesDay : மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல... காதலில் உருகிய அசோக்-கீர்த்தி!

அசோக்-கீர்த்தி
அசோக்-கீர்த்தி
Updated on
1 min read

கடந்த வருடத்தின் சென்சேஷனல் ஜோடி கீர்த்தி பாண்டியன் - அசோக்செல்வன் ஜோடி. காதலர் தின ஸ்பெஷலுக்காக தங்கள் காதல் தருணங்கள் குறித்து காமதேனு தமிழ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் இருவரும் பேசி இருக்கிறார்கள்.

எந்தவிதமான கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்த அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் திடீரென அறிவிக்கப்பட்டது. இவர்களது திருமண அறிவிப்பு கோலிவுட்டிலேயே பல பேருக்கு சர்ப்ரைஸ்தான். அந்த அளவுக்கு தங்கள் காதல் குறித்து இருவரும் எந்தவிதமான க்ளூவும் கொடுக்காமல் இருந்தனர்.

திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் கணவன் - மனைவியாக தங்களது முதலாவது காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர். பிப்ரவரி 18-ம் தேதி கீர்த்தியின் பிறந்தநாள் வருகிறது. காதல் தினம் ப்ளஸ் கீர்த்தி பிறந்தநாள் என டபுள் சரவெடியாக கொண்டாட தாய்லாந்து பறந்திருக்கிறது இந்த ஜோடி. காதலர் தின ஸ்பெஷலாக தங்கள் காதல் தருணங்களை இருவரும் ‘காமதேனு’வுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

”எங்களைச் சுற்றி, சினிமா துறையிலேயே நிறையப் பேர் பிரிந்து வாழ்வது, விவாகரத்து போன்றவற்றை செய்து கொண்டிருந்தார்கள். உண்மையில் அதைப் பார்க்கும் போது ரிலேஷன் ஷிப் மீதே எங்களுக்குப் பயம் வந்தது. நண்பர்களாவே தொடர்வோமா என்றெல்லாம் யோசித்து இருக்கிறோம். ஆனால், எங்களுடைய நிஜ ஸ்டார் கப்புள் என்றால் எங்கள் பெற்றோர்தான்.

இத்தனை வருடங்கள் உண்மையான காதலோடு அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கைதான் எங்களுக்கு உதாரணம். அதனால், அவர்களைப் போலவே காதலோடு வாழ வேண்டும் என்ற உற்சாகத்தில்தான் எங்கள் காதலை திருமணம் என்ற அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றோம்” என்கிறது இந்த ஜோடி.

இருவரும் கொடுத்த முதல் பரிசு, பிடித்த காதல் படம், பிடித்த காதல் காட்சி, ஒன்றாக முதலில் போன இடம் எனப் பல விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்கள்.

அதேபோல, கீர்த்தி அசோக் செல்வனுக்கு ‘குணா’ படத்தில் இடம்பெற்ற மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல பாட்டை டெடிகேட் செய்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in