ஆர்யா படத்தையும் கைப்பற்றியது உதயநிதியின் ரெட் ஜெயன்ட்!

ஆர்யா படத்தையும் கைப்பற்றியது உதயநிதியின் ரெட் ஜெயன்ட்!

ஆர்யா நடித்துள்ள ’கேப்டன்’ படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

'டெடி’ படத்தை அடுத்து, ஆர்யாவும், சக்தி சௌந்தர் ராஜனும், இணைந்துள்ள படம், ‘கேப்டன்’. இதில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி
இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி

இந்தப் படத்தை திங் ஸ்டூடியோஸ் நிறுவனம், ஆர்யாவின் த ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபரில் தொடங்கி நிறைவடைந்துள்ளது. முக்கிய காட்சிகளை வட இந்தியாவின் அடர்ந்த காடுகளில் ஷூட் செய்த படக்குழு, குளு மணாலியில் இறுதிக் கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள் ளது. செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.

கமல்ஹாசனின் ’விக்ரம்’ உட்பட பல்வேறு படங்களை வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்தப் படத்தையும் வெளியிடுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in