இயக்குநராக அறிமுகமாகிறார் ஷாருக்கான் மகன்?

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சுஹானா கான் என்ற மகள், ஆர்யன் கான், அப்ரம் கான் ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் ஆர்யன் கான், கோவா சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்துகொண்டதன் காரணமாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

ஷாருக்கானுடன் ஆர்யன் கான்
ஷாருக்கானுடன் ஆர்யன் கான்

இந்நிலையில், ஷாருக்கான் தனது மகன் ஆர்யான் கானை சினிமாவில் பிசியாக்க திட்டமிட்டுள்ளார். அவரை இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக;ச செய்திகள் வெளியாகி உள்ளன. ஆர்யன் கான், அமெரிக்காவின் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுதுவது பற்றி பயின்றுள்ளார். ஏற்கெனவே ‘பதான்’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் ஷாருக்கானுக்கு ஆர்யன் உதவியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஹாலிவுட் இயக்குநர் யாரிடமாவது அவரை உதவி இயக்குநராக இப்போது சேர்க்கலாம் என்றால், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை. போதைப் பொருள் வழக்கில் அவர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பாலிவுட்டில், ஷாருக்கானின் நண்பர்களான கரண் ஜோஹர், ஆதித்யா சோப்ரா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு அவர் படம் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஷாருக் மகள் சுஹானா கான், ஷோயா அக்தர் இயக்கும் வெப் தொடரில் நடிகையாக அறிமுகமாகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in